/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஒலிம்பிக் செல்லுமா இந்திய அணி * உலக தடகள 'ரிலே' ஓட்டத்தில்...
/
ஒலிம்பிக் செல்லுமா இந்திய அணி * உலக தடகள 'ரிலே' ஓட்டத்தில்...
ஒலிம்பிக் செல்லுமா இந்திய அணி * உலக தடகள 'ரிலே' ஓட்டத்தில்...
ஒலிம்பிக் செல்லுமா இந்திய அணி * உலக தடகள 'ரிலே' ஓட்டத்தில்...
ADDED : மே 03, 2024 10:57 PM

நிசாவ்: உலக தடகள 'ரிலே' ஓட்டத்தில் அசத்தி, இந்திய அணியினர் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க காத்திருக்கின்றனர்.
பஹாமசில் உலக தடகள 'ரிலே' போட்டி (4x400 மீ., ஓட்டம்) இன்று துவங்குகிறது. இதில் சிறப்பாக செயல்படும் அணிகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். இந்தியா சார்பில் ஆண்கள், பெண்கள், கலப்பு அணிகள் கலந்து கொள்கின்றன. இதற்காக 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக இந்திய ஆண்கள் 'ரிலே' அணி அசத்துகிறது. டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்று 2ல் 4வது இடம் பெற்று, ஆசிய சாதனை (2 நிமிடம், 59.05 வினாடி) படைத்தது. 2023 உலக தடகள சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றில் அமெரிக்காவுக்கு சவால் கொடுத்து இரண்டாவது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறியது. ஆசிய விளையாட்டில் தங்கம் (3 நிமிடம், 1.58 வினாடி) வென்றது.
முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் கூட்டணியின் செயல்பாட்டில் (3.05.71) முன்னேற்றம் அடைந்தால் பாரிஸ் ஒலிம்பிக் செல்லலாம்.
பெண்கள் 4x400 மீ., ஓட்டத்தில் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற பூவம்மா, ஹாங்சு ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற தமிழகத்தின் வித்யா ராம்ராஜ், ஐஸ்வர்யா, பிராச்சி, சுபா வெங்கடேசன் (தமிழகம்), ஜோதிகா ஸ்ரீ, ரூபல் என 7 பேர் களமிறங்குகின்றனர்.
வாய்ப்பு எப்படி
இன்று நடக்கும் தகுதிச்சுற்று ஓட்டத்தில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். தவிர, நாளை நடக்க உள்ள பைனலில் பங்கேற்று பதக்கம் வெல்லலாம்.
மற்ற அணிகள் நாளை நடக்கும் கூடுதல் தகுதிச்சுற்றில் பங்கேற்கலாம். இதில் 'டாப்-2' இடம் பிடித்தால் ஒலிம்பிக் செல்லலாம்.