ADDED : ஜூலை 19, 2025 09:48 PM

அரையிறுதியில் ஸ்பெயின்
பெர்ன்: சுவிட்சர்லாந்தில் நடக்கும் பெண்கள் 'யூரோ' கோப்பை கால்பந்து தொடருக்கான காலிறுதியில் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் அணிகள் மோதின. காஸ்டிலா, பினா தலா ஒரு கோல் அடித்து கைகொடுக்க ஸ்பெயின் அணி 2-0 என வெற்றி பெற்றது.
அமெரிக்கா அசத்தல்
புர்னோ: செக்குடியரசில் நடக்கும் பெண்கள் (19 வயது) உலக கோப்பை கூடைப்பந்து காலிறுதியில் அமெரிக்க அணி 70-65 என பிரான்சை வென்றது. மற்றொரு காலிறுதியில் போர்ச்சுகல் அணி 58-68 என ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது.
பைனலில் உக்ரைன்
தெலாவி: ஜார்ஜியாவில் நடக்கும் பெண்கள் (19 வயது) ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் உக்ரைன் அணி 35-25 என பெல்ஜியத்தை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் இத்தாலி அணி 20-23 என சுலோவாகியாவிடம் தோல்வியடைந்தது.
அர்ஜென்டினா அபாரம்
குய்டோ: ஈகுவடாரில் நடக்கும் பெண்கள் கோபா அமெரிக்கா கால்பந்து லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-1 என சிலியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது. மற்றொரு போட்டியில் உருகுவே அணி 1-0 என, பெரு அணியை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது.
எக்ஸ்டிராஸ்
* பஹ்ரைனில் நடக்கும் உலக '6-ரெட்' ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்தியாவின் கமல் சாவ்லா 4-2 என, பஹ்ரைனின் ஜாபர் அல்ரயீசை வீழ்த்தினார்.
* சீனாவில், வரும் செப். 5ல் பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் துவங்குகிறது. இதற்கு தயாராகும் விதமாக இந்திய வீராங்கனைகள் பெங்களூருவில் பயிற்சி முகாமில் பங்கேற்கவுள்ளனர். இதற்காக நவ்னீத் கவுர், தீபிகா, சங்கீதா குமாரி, சுமன் தேவி, மணிஷா சவுகான், ஷர்மிளா தேவி, கோல்கீப்பர்களான சவிதா, பிச்சு தேவி உள்ளிட்டோர் அடங்கிய 40 பேர் கொண்ட உத்தேச அணி அறிவிக்கப்பட்டது.
* இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் யார்க் ஷயர் அணிக்காக விளையாட இந்திய மிடில் ஆர்டர் பேட்டர் ருதுராஜ் கெய்க்வாட் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் சொந்த காரணங்களுக்கான இப்போட்டியில் இருந்து விலகினார்.
* வரும் 2029ல் லண்டனில், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்திட பிரிட்டன் அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த 2017ல் லண்டனில் முதன்முறையாக இப்போட்டி நடத்தப்பட்டது.