sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : ஆக 07, 2025 10:21 PM

Google News

ADDED : ஆக 07, 2025 10:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலிறுதியில் ஸ்பெயின்

மாடோசின்ஹோஸ்: போர்ச்சுகலில் நடக்கும் பெண்களுக்கான (20 வயது) 'யூரோ' கூடைப்பந்து 'ரவுண்டு-16' போட்டியில் ஸ்பெயின், ஜெர்மனி அணிகள் மோதின. ஸ்பெயின் அணி 88-69 என வெற்றி பெற்றது. போர்ச்சுகல் அணி 75-91 என, பெல்ஜியத்திடம் வீழ்ந்தது.

ஐஸ்லாந்து அசத்தல்

கெய்ரோ: எகிப்தில் நடக்கும் ஆண்கள் (19 வயது) உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் ஐஸ்லாந்து, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஐஸ்லாந்து அணி 43-27 என வெற்றி பெற்றது. டென்மார்க் அணி 36-25 என அமெரிக்காவை தோற்கடித்தது.

அர்ஜென்டினா அபாரம்

சுரபயா: இந்தோனேஷியாவில் நடக்கும் பெண்கள் (21 வயது) உலக வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் அர்ஜென்டினா, கனடா அணிகள் மோதின. அர்ஜென்டினா அணி 3-0 என வெற்றி பெற்றது. அமெரிக்க அணி 3-1 என தென் கொரியாவை வென்றது.

மயாமி முன்னேற்றம்

போர்ட் லாடர்டேல்: அமெரிக்காவில் நடக்கும் லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் லுாயிஸ் சாரஸ் தலைமையிலான இன்டர் மயாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் பூமாஸ் அணியை வீழ்த்தியது. மயாமி அணி 8 புள்ளிகளுடன் காலிறுதிக்கு முன்னேறியது.

எக்ஸ்டிராஸ்

* மணிப்பூரின் இம்பாலில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் இந்திய கடற்படை, 'நெரோகா' எப்.சி., அணிகள் மோதின. இப்போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.

* துலீப் டிராபி கிரிக்கெட் தொடருக்கான (ஆக. 28 - செப். 11) வடக்கு மண்டல அணிக்கு கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். இந்த அணியில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

* இந்தியா 'ஏ' அணிக்கு எதிராக 4 நாள் போட்டி கொண்ட தொடரில் (செப். 16-19, 23-26, லக்னோ) பங்கேற்கும் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

* ஆந்திராவின் காக்கிநாடாவில் நடக்கும் ஜூனியர் பெண்கள் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் மகாராஷ்டிரா அணி 5-1 என ஆந்திர பிரதேச அணியை வீழ்த்தியது. சட்டீஸ்கர் அணி 6-1 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை வென்றது.






      Dinamalar
      Follow us