sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : ஆக 11, 2025 10:23 PM

Google News

ADDED : ஆக 11, 2025 10:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்பெயின் 'சாம்பியன்'

போர்ச்சுகலில் நடந்த பெண்கள் (20 வயது) 'யூரோ' கூடைப்பந்து சாம்பியன்ஷிப் பைனலில் ஸ்பெயின் அணி 102-50 என்ற கணக்கில் லிதுவேனியாவை வீழ்த்தி, 10வது முறையாக கோப்பை வென்றது. இத்தாலி அணி 84-51 என, சுவீடனை வீழ்த்தி 3வது இடம் பிடித்தது.

சுவீடன் அபாரம்

எகிப்தில் நடக்கும் ஆண்களுக்கான (19 வயது) உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் சுவீடன் அணி 39-33 என்ற கணக்கில், சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது. மற்றொரு லீக் போட்டியில் ஜெர்மனி அணி 26-21 என பிரான்சை தோற்கடித்தது.

அர்ஜென்டினா அசத்தல்

இந்தோனேஷியாவில் நடக்கும் பெண்களுக்கான (21 வயது) உலக வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கணக்கில் வியட்நாமை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் அமெரிக்க அணி 3-0 என, குரோஷியாவை வென்றது.

ஜெர்மனி-இங்கிலாந்து 'டிரா'

ஜெர்மனியில் நடக்கும் 'யூரோ' ஹாக்கி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் மோதின. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. ஸ்பெயின் அணி 10-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது.

எக்ஸ்டிராஸ்

* பஞ்சாப்பின் ஜலந்தரில், ஜூனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 15வது சீசன் இன்று துவங்குகிறது. 'நடப்பு சாம்பியன்' பஞ்சாப், உ.பி., உள்ளிட்ட 30 அணிகள் பங்கேற்கின்றன. பைனல், ஆக. 23ல் நடக்கவுள்ளது.

* லண்டன் கோல்ப் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை திக் ஷா தாகர், 19வது இடத்தை பகிர்ந்து கொண்டார். ஜெர்மனியின் லாரா பன்ப்ஸ்டக் சாம்பியன் ஆனார்.

* ''போட்டியில் 62 மீ., துாரத்திற்கு மேல் எறிந்தது நம்பிக்கை அளித்துள்ளது. உலக தடகளத்தில் பதக்கம் வெல்வதே இலக்கு,'' என, இந்திய ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us