sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : ஆக 16, 2025 10:30 PM

Google News

ADDED : ஆக 16, 2025 10:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லிதுவேனியா முன்னேற்றம்

ஜார்ஜியாவில் நடக்கும் 'யூரோ' கூடைப்பந்து (16 வயது) அரையிறுதியில் லிதுவேனியா, இத்தாலி மோதின. லிதுவேனியா அணி 91-81 என வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் செர்பிய அணி 90-58 என சுலோவேனியாவை தோற்கடித்தது.

பைனலில் ஜெர்மனி

எகிப்தில் நடக்கும் ஆண்களுக்கான (19 வயது) உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் ஜெர்மனி அணி 32-30 என்ற கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயின் அணி 33-30 என, சுவீடனை வென்றது.

பிரேசில் ஏமாற்றம்

இந்தோனேஷியாவில் நடக்கும் பெண்களுக்கான (21 வயது) உலக வாலிபால் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் பிரேசில், இத்தாலி மோதின. பிரேசில் அணி 0-3 என தோல்வியடைந்தது. மற்றொரு அரையிறுதியில் ஜப்பான் அணி 3-0 என பல்கேரியாவை வீழ்த்தியது.

சீன அணி கலக்கல்

சவுதி அரேபியாவில் நடக்கும் ஆசிய கோப்பை கூடைப்பந்து 31வது சீசனுக்கான அரையிறுதியில் நியூசிலாந்து, சீனா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய சீன அணி 98-84 (28-19, 14-21, 26-26, 30-18) என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.



எக்ஸ்டிராஸ்

* மேகாலயாவில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து தொடருக்கான காலிறுதியில் ஷில்லாங் லஜோங் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய கடற்படை அணியை வீழ்த்தியது.

* பஞ்சாப்பின் ஜலந்தரில் நடக்கும் ஜூனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் தமிழக அணி 4-8 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது. தமிழகம் சார்பில் மணிமாறன் 'ஹாட்ரிக்', ஆகாஷ் ஒரு கோல் அடித்தனர்.

* அமெரிக்காவில் நடந்த செயின்ட் லுாயிஸ் செஸ் தொடரின் 'பிளிட்ஸ்' பிரிவில் ஏமாற்றிய இந்தியாவின் குகேஷ், 18.0 புள்ளிகளுடன் 7வது இடம் பிடித்தார். அமெரிக்காவின் ஆரோனியன் (24.5 புள்ளி) சாம்பியன் பட்டம் வென்றார்.

* சீனாவில் நடந்த ஆசிய யூத் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என, 7 பதக்கம் கிடைத்தது.

* உஸ்பெகிஸ்தானில் நடக்கவுள்ள 'பிடே கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடரில் (செப். 3-15) இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், சகவீரர்களான அர்ஜுன் எரிகைசி, 'நடப்பு உலக சாம்பியன்' குகேஷ் ஆகியோருடன் 'ஓபன்' பிரிவில் பங்கேற்கிறார்.






      Dinamalar
      Follow us