sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : அக் 01, 2025 09:27 PM

Google News

ADDED : அக் 01, 2025 09:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னர் 'சாம்பியன்'

பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் லேர்னர் டீன் மோதினர். இதில் சின்னர் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

ஜப்பான் வெற்றி

சான்டியாகோ: சிலியில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. லீக் போட்டியில் ஜப்பான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தியது. மற்றொரு லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 2-1 என, எகிப்தை தோற்கடித்தது.

ஆஸி.,யில் உலக ரக்பி

சிட்னி: ஆஸ்திரேலியாவில், வரும் 2027ல் (அக். 1 - நவ. 13) உலக கோப்பை ரக்பி 11வது சீசன் நடக்கவுள்ளது. 'நடப்பு சாம்பியன்' தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்கின்றன. சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலெய்டு உள்ளிட்ட 7 இடங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன.

எக்ஸ்டிராஸ்

* பிரேசிலில் நடக்கும் 'கிராண்ட் செஸ் டூர் பைனல்ஸ்' தொடருக்கான அரையிறுதியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 11-17 என, பிரான்சின் மேக்சிம் வாச்சியர்-லக்ரேவிடம் தோல்வியடைந்தார். மூன்றாவது இடத்துக்கான போட்டியில் அமெரிக்காவின் ஆரோனியன், பிரக்ஞானந்தா மோதுகின்றனர்.

* ராஞ்சியில் நடந்த தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ரயில்வே அணி, 274 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சிறந்த வீரர், வீராங்கனையாக மணிகண்டா (100 மீ., ஓட்டம்), பூஜா (800 மீ., ஓட்டம்) தேர்வாகினர்.

* சீனாவில் நடக்கும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் விலகினார்.

* சர்வதேச டென்னிஸ் ஹால் ஆப் பேம் பட்டியலில் (2026) சேர்ப்பதற்கான பரிந்துரை பட்டியலில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் இடம் பெற்றுள்ளார்.






      Dinamalar
      Follow us