/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உலக தடகளம்: இந்தியா ஏமாற்றம்
/
உலக தடகளம்: இந்தியா ஏமாற்றம்
ADDED : அக் 01, 2025 09:59 PM

புதுடில்லி: இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் நடக்கிறது. நேற்று பெண்களுக்கான ஈட்டி எறிதல் எப் 56 பிரிவு பைனல் நடந்தது. இந்தியா சார்பில் சுசித்ரா பரிதா பங்கேற்றார். 5வது வாய்ப்பில் அதிகபட்சம் 18.29 மீ., துாரம் மட்டும் எறிந்த சுசித்ரா, 6வது இடம் பெற்று, பதக்க வாய்ப்பை இழந்தார். லாட்வியாவின் டயானா (26.18), பிரேசிலின் ரெய்சா (23.90), ஈரானின் ஜெய்னப் (22.06) முதல் மூன்று இடம் பிடித்தனர்.
பெண்களுக்கான 400 மீ., டி 47 பிரிவு தகுதிச்சுற்று ஓட்டம் நடந்தது. இந்தியாவின் அஞ்சனாபென், 1 நிமிடம், 00.04 வினாடி நேரத்தில் வந்து நான்காவது இடம் பிடித்து, பைனல் வாய்ப்பை இழந்தார். இருப்பினும் இது இவரது சிறந்த ஓட்டமாக அமைந்தது.
ஆண்களுக்கான 400 மீ., டி 47 பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் திலிப் (48.20 வினாடி) பைனலுக்கு முன்னேறினார். ஆண்கள் 400 மீ., டி 38 பிரிவு பைனலில் இந்தியாவின் அகிரா (53.07) கடைசி இடம் (9) பிடித்தார். ஆண்கள் வட்டு எறிதல் எப் 57 பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் பிரியான்ஸ் குமார் (39.12 மீ.,), பிர்பத்ரா சிங் (38.79 மீ.,) 4, 5வது இடம் பெற்றனர்.
இந்தியா இதுவரை தலா 4 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என 9 பதக்கம் வென்று பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடத்தில் பிரேசில் (7 தங்கம், 15 வெள்ளி, 6 வெண்கலம், மொத்தம் 28), சீனா (7+8+4=19), போலந்து (6+1+5=12) அணிகள் உள்ளன