ADDED : அக் 02, 2025 11:20 PM

அரையிறுதியில் கோகோ காப்
பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப், ஜெர்மனியின் ஈவா லைஸ் மோதினர். கோகோ காப் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
பிரேசில் தோல்வி
சான்டியாகோ: சிலியில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. லீக் போட்டியில் பிரேசில் அணி 1-2 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்தது. ஸ்பெயின், மெக்சிகோ அணிகள் மோதிய போட்டி 2-2 என 'டிரா' ஆனது.
பார்சிலோனா ஏமாற்றம்
பார்சிலோனா: ஸ்பெயினில் நடந்த ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிரான்ஸ்), பார்சிலோனா (ஸ்பெயின்) அணிகள் மோதின. இதில் பார்சிலோனா அணி 1-2 என தோல்வியடைந்தது.
எக்ஸ்டிராஸ்
* டில்லியில் நடக்கும் தேசிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தமிழக வீரர் மணிஷ் 1-6, 6-1, 7-6 என்ற செட் கணக்கில் ரயில்வே அணியின் நிதின் குமார் சின்ஹாவை வீழ்த்தினார்.
* கான்பெராவில் நடந்த ஜூனியர் பெண்கள் (21 வயது) ஹாக்கி 5வது போட்டியில் இந்திய அணி 4-5 என்ற கோல் கணக்கில் கான்பெரா சில் அணியிடம் தோல்வியடைந்தது.
* சட்டீஸ்கரில் நடந்த சீனியர் பெண்களுக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மோனிஷா 2 கோல் அடித்து கைகொடுக்க தமிழக அணி 2-0 என, சட்டீஸ்கரை வீழ்த்தியது.
* சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மானவ் தாக்கர், மானுஷ் ஷா ஜோடி 1-3 (6-11, 7-11, 11-9, 9-11) என, சீனாவின் ஜோ கிஹாவோ, சென் ஜுன்சாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
* இந்தியா, இலங்கையில் நடக்கவுள்ள 'டி-20' உலக கோப்பை தொடருக்கு (2026, பிப். 7 - மார்ச் 8) நமீபியா அணி தகுதி பெற்றது.