sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : அக் 03, 2025 10:59 PM

Google News

ADDED : அக் 03, 2025 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரையிறுதியில் ஜெசிகா

பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, எம்மா நவரோ மோதினர். இதில் ஜெசிகா 6-7, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

அமெரிக்கா தகுதி

ரன்காகுவா: சிலியில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. லீக் போட்டியில் அமெரிக்க அணி 3-0 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தியது. ஏற்கனவே நியூ கலிடோனியாவை வீழ்த்திய அமெரிக்கா 'நாக்-அவுட்' சுற்றுக்குள் நுழைந்தது.

மழையால் ரத்து

மவுன்ட் மவுன்கானுய்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதிய 2வது 'டி-20' போட்டி கனமழையால் பாதியில் ரத்தானது. முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி மவுன்ட் மவுன்கானுயில் இன்று நடக்கவுள்ளது.

எக்ஸ்டிராஸ்

* டில்லியில் நடக்கும் தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் தமிழக வீரர் மணிஷ் 1-6, 6-1, 6-1 என மேற்கு வங்கத்தின் இஷாக் இக்பாலை வீழ்த்தினார். பைனலில் சகவீரர் கீர்த்திவாசனை சந்திக்கிறார் மணிஷ்.

* அமெரிக்காவில் நடக்கும் சார்லோட்ஸ்வில்லே ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் 1-3 என எகிப்தின் சல்மான் கலிலிடம் வீழ்ந்தார். இந்தியாவின் வீர் சோட்ரானி 1-3 என அமெரிக்காவின் டிமோதி பிரவுன்வெல்லிடம் தோல்வியடைந்தார்.

* சீனா செல்லவுள்ள இந்தியா 'ஏ' பெண்கள் ஹாக்கி அணி, ஐந்து போட்டிகள் கொண்ட (அக். 13, 15, 17, 19, 21) தொடரில் லியோனிங் அணியை சந்திக்கிறது.






      Dinamalar
      Follow us