sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : அக் 24, 2025 09:25 PM

Google News

ADDED : அக் 24, 2025 09:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெல்னிகோவா கலக்கல்

ஜகார்தா: இந்தோனேஷியாவில் நடக்கும் உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் 'வால்ட்' பிரிவு பைனலில் அசத்திய ரஷ்யாவின் ஏஞ்சலினா மெல்னிகோவா (14.466 புள்ளி) தங்கம் வென்றார். இவர் இம்முறை, ஏற்கனவே ஒரு தங்கம் ('ஆல்-ரவுண்டு'), ஒரு வெள்ளி ('அன்ஈவன் பார்ஸ்') வென்றிருந்தார்.

ஜப்பான் முன்னேற்றம்

சாலே: மொராக்கோவில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 9வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் ஜப்பான் அணி 2-0 என, ஜாம்பியாவை வீழ்த்தியது. இதுவரை விளையாடிய 2 போட்டியிலும் வென்ற ஜப்பான் (6 புள்ளி) 'நாக்-அவுட்' சுற்றுக்குள் நுழைந்தது.

அர்ஜென்டினா ஆதிக்கம்

அசுன்சியன்: பராகுவேயில் நடக்கும் பெண்களுக்கான (17 வயது) தென் அமெரிக்க கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 83-41 என, பொலிவியாவை தோற்கடித்தது. இதுவரை விளையாடிய 4 போட்டியிலும் வென்ற அர்ஜென்டினா (8 புள்ளி) அரையிறுதிக்கு முன்னேறியது.

ஸ்பெயின் வெற்றி

காசாபிளாங்கா: மொராக்கோவில், 17 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் முதல் சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் தென் கொரியா, ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் அணி 57-16 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

எக்ஸ்டிராஸ்

* நாகலாந்து கிரிக்கெட் சங்க மைதானத்தில் (இடம்: சோவிமா) இன்று துவங்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், நாகலாந்து அணிகள் விளையாடுகின்றன. தமிழக அணி, தனது முதல் போட்டியில் ஜார்க்கண்ட் அணியிடம் இன்னிங்ஸ் தோல்வியடைந்தது.

* ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கும் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-3, 7-6 என, கனடாவின் விக்டோரியா எம்போகோவை வீழ்த்தினார். இதன்மூலம் டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் தொடருக்கு (நவ. 1-8, ரியாத்) தகுதி பெற்றார்.

* புனேயில், அடுத்த ஆண்டு ஜன. 19-23ல் 'கிராண்ட் டூர்' சைக்கிள் பந்தயம் நடக்கவுள்ளது.






      Dinamalar
      Follow us