sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : அக் 27, 2025 10:40 PM

Google News

ADDED : அக் 27, 2025 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நோரிஸ் 'சாம்பியன்'

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ 'கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1' கார்பந்தயத்தில் 'மெக்லாரன்-மெர்சிடஸ்' அணியின் பிரிட்டன் வீரர் லாண்டோ நோரிஸ் (ஒரு மணி நேரம், 37 நிமிடம், 58.574 வினாடி) சாம்பியன் ஆனார். சிறந்த டிரைவருக்கான உலக சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு (357 புள்ளி) முன்னேறினார் நோரிஸ்.

அமெரிக்கா பதிலடி

ஈஸ்ட் ஹார்ட்போர்டு: அமெரிக்காவில் நடந்த 2வது சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் அமெரிக்க பெண்கள் அணி 3-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தியது. சமீபத்தில் நடந்த முதல் போட்டியில் போர்ச்சுகலிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது அமெரிக்கா.

அர்ஜென்டினா அசத்தல்

அசுன்சியன்: பராகுவேயில், பெண்களுக்கான (17 வயது) தென் அமெரிக்க கூடைப்பந்து சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் பைனலில் அர்ஜென்டினா, வெனிசுலா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய அர்ஜென்டினா 67-46 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 5வது முறையாக கோப்பை வென்றது.

ஸ்பெயின் கலக்கல்

காசாபிளாங்கா: மொராக்கோவில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் முதல் சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் ஸ்பெயின் அணி 41-24 என, கத்தாரை வீழ்த்தி, 2வது வெற்றியை பதிவு செய்தது. தென் கொரிய அணி 27-33 என, துனிசியாவிடம் வீழ்ந்தது.

எக்ஸ்டிராஸ்

* ஜெர்மனியில், ஹைலோ ஓபன் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, சங்கர் முத்துசாமி, உன்னதி ஹூடா, ஆகர்ஷி காஷ்யப் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

* கனடா ஓபன் ஸ்குவாஷ் தொடரின் 2வது சுற்றில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 12-10, 12-10, 8-11, 11-2 என பிரான்சின் மெலிசா ஆல்வ்சை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.

* கோவாவில் நடக்கும் சூப்பர் கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 3-0 என்ற கோல் கணக்கில் கோகுலம் கேரளா அணியை வீழ்த்தியது.






      Dinamalar
      Follow us