தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/'உலக' ஸ்குவாஷ்: பைனலில் அனாஹத்

'உலக' ஸ்குவாஷ்: பைனலில் அனாஹத்

'உலக' ஸ்குவாஷ்: பைனலில் அனாஹத்


ADDED : ஜூலை 25, 2026 10:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 10:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒன்டாரியோ: உலக ஜூனியர் ஸ்குவாஷ் பைனலுக்கு இந்திய வீராங்கனை அனாஹத் சிங் முன்னேறினார்.

கனடாவில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான அரையிறுதியில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் பார்ப் சமேஹ் மோதினர். அபாரமாக ஆடிய உலகின் 'நம்பர்-20' அனாஹத் 3-1 (11-3, 8-11, 11-4, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். உலக ஜூனியர் ஸ்குவாஷ் வரலாற்றில், பைனலுக்கு முன்னேறிய 2வது இந்தியரானார் அனாஹத். இதற்கு முன் 2005ல் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்திருந்தார்.

பைனலில் அனாஹத், எகிப்து வீராங்கனை ருகையா சலெம் மோதுகின்றனர். இதில் அனாஹத் வென்றால், உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us