/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உலக ஸ்குவாஷ்: அரையிறுதியில் இந்தியா
/
உலக ஸ்குவாஷ்: அரையிறுதியில் இந்தியா
ADDED : டிச 12, 2025 11:10 PM

சென்னை: உலக கோப்பை ஸ்குவாஷ் தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
சென்னையில், உலக கோப்பை ஸ்குவாஷ் 5வது சீசன் நடக்கிறது. லீக் சுற்றில் சுவிட்சர்லாந்து, பிரேசிலை வீழ்த்திய இந்திய அணி, நேற்று நடந்த காலிறுதியில் தென் ஆப்ரிக்காவை சந்தித்தது.
முதல் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, தென் ஆப்ரிக்காவின் டீகன் ரசல் மோதினர்.இதில் ஜோஷ்னா 3-0 (7-4, 7-4, 7-2) என வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டியில் இந்தியாவின் அபே சிங் 3-0 (7-1, 7-6, 7-1) என, தென் ஆப்ரிக்காவின் டிவால்ட் வான் நீகெர்க்கை வென்றார்.
மூன்றாவது போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங் 3-0 (7-3, 7-3, 7-4) என, தென் ஆப்ரிக்காவின் ஹேலி வார்டை தோற்கடித்தார். முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இந்திய அணி, எகிப்தை சந்திக்கிறது.

