ADDED : நவ 03, 2025 11:11 PM

கோவா: கோவாவில், செஸ் உலக கோப்பை 11வது சீசன் நடக்கிறது. இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் உள்ளிட்ட 206 பேர் பங்கேற்கின்றனர். பெண்கள் உலக கோப்பை தொடரின் சாம்பியன் இந்தியாவின் திவ்யா, முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து, வெளியேறினார். நேற்று முதல் சுற்று 'டை பிரேக்கர்' போட்டிகள் நடந்தன.
இந்தியாவின் நாராயணன், பெருவின் ஸ்டீபன் ரோஜாசை சந்தித்தார். இருவரும் மோதிய முதல் இரு போட்டியும் 'டிரா' ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த, முதல் 'டை பிரேக்கரில்' நாராயணன் வெற்றி பெற்றார். அடுத்த போட்டியை 'டிரா' செய்தால் போதும் என்ற நிலையில், 22வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முடிவில் 3.0-1.0 என்ற கணக்கில் வென்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இன்று துவங்கும் இரண்டாவது சுற்றில் குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.

