/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஜூனியர் அணி அறிவிப்பு * உலக தடகள தொடருக்கான...
/
ஜூனியர் அணி அறிவிப்பு * உலக தடகள தொடருக்கான...
ADDED : ஆக 17, 2024 10:44 PM

புதுடில்லி: ஜூனியர் உலக தடகளத்தில் பங்கேற்கும் இந்திய அணியில் 43 பேர் இடம் பெற்றனர்.
உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் (20 வயதுக்குட்பட்ட) ஆக. 27-31ல் பெருவின் லிமாவில் நடக்கவுள்ளது. 134 அணிகளில் இருந்து மொத்தம் 1700 வீரர், வீராங்கனை பங்கேற்க உள்ளனர்.
கடந்த சீசனில் இந்தியா இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கத்துடன் பட்டியலில் 25வது இடம் பிடித்தது. இம்முறை இந்திய அணியில் 23 வீரர், 20 வீராங்கனை என மொத்தம் 43 பேர் பங்கேற்க காத்திருக்கின்றனர்.
வழக்கமாக 4X400 மீ., தொடர் ஓட்டத்தில் ஆண், பெண், கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா பங்கேற்கும். தற்போது கூடுதலாக 4X100 மீ., தொடர் ஓட்டத்தில் ஆண், பெண்கள் அணி களமிறங்குகின்றன.
400 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் கார்த்திக் ராஜா ஆறுமுகம், 110 மீ., தடை ஓட்டத்தில் ஹரிஹரன் கதிரவன், 100 மீ., 4X100 மீ., தொடர் ஓட்டத்தில் அபிநயா, தவிர லக்சியா (800 மீ.,), பாவனா (நீளம் தாண்டுதல்), தமன்னா (குண்டு எறிதல்), தேவ் குமார் மீனா (போல் வால்ட்), பிரதீக் குமார் ('ஹாம்மர் த்ரோ') உள்ளிட்டோர் இந்திய ஜூனியர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.