/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உலக தடகளம்: இந்தியா ஏமாற்றம்
/
உலக தடகளம்: இந்தியா ஏமாற்றம்
ADDED : ஆக 28, 2024 10:56 PM

லிமா: உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், தொடர் ஓட்டத்தில் இந்தியா ஐந்தாவது இடம் பிடித்து ஏமாற்றியது.
பெருவில், உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் (20 வயதுக்குட்பட்ட) நடக்கிறது. கலப்பு அணிகளுக்கான 4X400 மீ., தொடர் ஓட்டத்தில் இந்தியா களமிறங்கியது. கடந்த 2022 ல் வெள்ளி வென்ற இந்தியா, இம்முறை தகுதிச்சுற்றில் ஜெய் குமார், நீரு பதக், ரிஹான் சவுத்ரி, சந்திரமோல் இடம் பெற்ற அணி களமிறங்கியது.
3 நிமிடம், 22.54 வினாடி நேரத்தில் வந்து, இரண்டாவது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இந்த சீசனில் இந்திய அணியின் சிறந்த ஓட்டமாக இது அமைந்தது.
பின் நடந்த பைனலில் இந்திய அணி 3 நிமிடம், 22.92 வினாடி நேரத்தில் வந்து, ஐந்தாவது இடம் பிடித்து ஏமாற்றியது. ஆஸ்திரேலியா (3:19.27), போலந்து (3:20.44), சீனா (3:21.27) அணிகள் முதல் மூன்று இடம் பிடித்தன.
பெண்களுக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் அமனத் காம்போஜ், 49.98 மீ., துாரம் எறிந்து, 10வது இடம் பிடிக்க, பைனலுக்கு முன்னேறினார். நீத்திகா குமாரி (45.38) 27வது இடம் பெற்றார்.
பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் பாவனா, 5.74 மீ., துாரம் தாண்ட, 19 வது இடம் பிடித்து, பைனல் வாய்ப்பை இழந்தார். பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் அபிநயா (தமிழகம்), 11.95 வினாடி நேரத்தில் வந்து, 30 வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் மிருத்யம் ஜெயராம் (10.65 வினாடி) 38வது இடம் பிடித்தார். 'ஹேம்மர் த்ரோ' போட்டியில் இந்திய வீரர் பிரதீக், 62.69 மீ., துாரம் எறிந்து 27வது இடம் பெற்றார். குண்டு எறிதலில் அனுராக் சிங் (18.13 மீ.,) 18 வது இடம் பிடித்தார்.
800 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் லக்சிதா (2:11.96) 31வது இடம் பெற்றார். ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ரோஹன் யாதவ் (67.07 மீ.,), திபான்ஷூ சர்மா (66.26 மீ.,) 19, 21 வது இடம் பெற்றனர்.