தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/அரையிறுதியில் அனிமேஷ், பர்னீத் * உலக பல்கலை., விளையாட்டில் அபாரம்

அரையிறுதியில் அனிமேஷ், பர்னீத் * உலக பல்கலை., விளையாட்டில் அபாரம்

அரையிறுதியில் அனிமேஷ், பர்னீத் * உலக பல்கலை., விளையாட்டில் அபாரம்


ADDED : ஜூலை 23, 2025 09:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2025 09:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரினே--ருஹ்ர்: ஜெர்மனியில், உலக பல்கலை., விளையாட்டு 32வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 90 பல்கலை.,யில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆண்களுக்கான 200 மீ., ஓட்டம் தகுதிச்சுற்று நடந்தது. இந்தியாவின் இளம் வீரர் அனிமேஷ் குஜுர் 22, பங்கேற்றார். இவர் 21.16 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். மணிகண்டா 24வது (21.42) இடம் பெற்று வெளியேறினார். பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் ஏஞ்சல்சில்வியா (24.01) அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

பர்னீத் அபாரம்

காம்பவுண்டு வில்வித்தை தனிநபர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பர்னீத் கவுர், பிரான்சின் அலிசியாவை சந்தித்தார். இதில் பர்னீத் கவுர், 144-141 என வென்று, அரையிறுதிக்கு முன்னறினார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அவ்னீத் கவுர், 140-146 என தென் கொரியாவின் இயூனிடம் வீழ்ந்தார்.

பெண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனலில் பங்கேற்ற இந்தியாவின் ஆன்சி சோஜன் (6.29 மீ.,) 8வது இடம் பெற்றார். பெண்கள் வட்டு எறிதலில் சன்யா (51.21 மீ.,) பைனலுக்கு தகுதி பெற்றார். கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி, அதர்வா ஜோடி, 0-6. 5-7 என ஜப்பானின் யோஷிமோட்டோ, பிரன்ட் ஜோடியிடம் தோற்றது.

பெண்கள் 800 மீ., ஓட்டத்தில் அமன்தீப் கவுர் (2 நிமிடம், 03.89 வினாடி, 8வது), சாந்தா (2 நிமிடம், 05.95 வினாடி, 16வது) அரையிறுதிக்கு முன்னேறினர்.

அபிநயா 'ஷாக்'

பெண்களுக்கான 100 மீ., அரையிறுதியில் இந்தியாவின் 18 வயது அபிநயா, 11.73 வினாடி நேரத்தில் வந்து 10வது இடம் பெற்றார். 0.03 வினாடி அதிகம் ஆனதால், பைனல் வாய்ப்பு நழுவியது.

அனைவருக்கும் பதக்கம்

பாட்மின்டன் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது. இருப்பினும், இந்திய அணி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக, 12 பேருக்குப் பதில் 6 பேர் மட்டும் பதிவு செய்யப்பட்டதால், மற்றவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சர்வதேச பல்கலை., விளையாட்டு அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முடிவில், பல்கலை., விதிப்படி மீதமுள்ள ரோஹன் குமார், தர்ஷன், ஆதித்தி, அபினாஷ், விராஜ், அலிஷா என 6 பேருக்கும், வெண்கலப் பதக்கம், சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us