/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
முதல் தங்கம் வென்றது இந்தியா * உலக பல்கலை., விளையாட்டில்...
/
முதல் தங்கம் வென்றது இந்தியா * உலக பல்கலை., விளையாட்டில்...
முதல் தங்கம் வென்றது இந்தியா * உலக பல்கலை., விளையாட்டில்...
முதல் தங்கம் வென்றது இந்தியா * உலக பல்கலை., விளையாட்டில்...
ADDED : ஜூலை 25, 2025 10:57 PM

ரினே ருஹ்ர்: ஜெர்மனியில், உலக பல்கலை., விளையாட்டு 32வது சீசன் நடக்கிறது. வில்வித்தை 'காம்பவுண்டு' பிரிவு கலப்பு அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் பர்னீத் கவுர், குஷால் தலால் ஜோடி, தென் கொரியாவின் பார்க், எரின் ஜோடியை சந்தித்தது. முதல் இரு செட்டில் பின்தங்கிய இந்தியா (77-78), கடைசி இரு செட்டில் (80-76) சிறப்பாக செயல்பட்டது. முடிவில் இந்தியா, 157-154 என வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது. இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கம் இது.
காம்பவுண்டு ஆண்கள் பைனலில் குஷால் தலால், சாஹில், ஹிரிதிக் இடம் பெற்ற இந்திய அணி, துருக்கியின் பதுஹான், எம்ரே, யாகுப் இடம் பெற்ற அணியை சந்தித்தது. முதல் இரு செட்டில் அசத்திய இந்தியா, பின் ஏமாற்றியது. முடிவில் 231-232 என அதிர்ச்சி தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
அவ்னீத் கவுர், பர்னீத் கவுர், மதுரா அடங்கிய இந்திய பெண்கள் காம்பவுண்டு அணி, 232-224 என பிரிட்டன் (கிரேஸ், ஹால்லி, சோல்) அணியை வென்று, வெண்கலம் கைப்பற்றியது.
வைஷ்ணவி வெண்கலம்
பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் அரையிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி, சுலோவாகியாவின் எஸ்தர் மேரி மோதினர். இதில் வைஷ்ணவி 6-2, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் போராடி தோற்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
3000 மீ., ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அன்கிதா தயானி (9 நிமிடம், 54.79 வினாடி), ஈட்டி எறிதலில் இந்தியாவின் கரிஷ்மா (53.12 மீ.,) பைனலுக்கு முன்னேறினர்.
போல்வால்ட் போட்டியில் இந்திய வீரர் தேவ் குமார் மீனா, 5.40 மீ., தாவி, புதிய தேசிய சாதனை (முன்னதாக தேவ் குமார், 5.35 மீ.,) படைத்து, பைனலுக்குள் நுழைந்தார்.
0.1 வினாடி சோகம்
ஆண்கள் 200 மீ., பைனல் நடந்தது. தென் ஆப்ரிக்காவின் பெயண்டா (20.63), ஸ்பெயினின் அட்ரியா (20.70), தென் கொரியாவின் ஜயேசியாங் (20.75) முதல் மூன்று இடம் பெற்றனர். 0.1 வினாடி பின் தங்கிய இந்தியாவின் அனிமேஷ் (20.85) நான்காவது இடம் பெற, வெண்கலப் பதக்கம் நழுவியது.
5 பதக்கம்
உலக பல்கலை., விளையாட்டில் இந்தியா இதுவரை 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கம் கைப்பற்றியது. பட்டியலில் 23வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அமெரிக்கா (28+21+25=74) உள்ளது.