ADDED : ஜூன் 06, 2024 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புடாபெஸ்ட்: ஹங்கேரி மல்யுத்த தொடரில் இந்திய வீரர் அமன் ஷெராவத், வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஹங்கேரியில் சர்வதேச மல்யுத்த தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டி நடக்கின்றன. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்ற இந்திய வீரர் அமன் ஷெராவத், 57 கிலோ பிரிவில் பங்கேற்றார். காலிறுதியில் ஜார்ஜியாவின் ராபர்ட்டை சந்தித்தார். இதில் அமன் ஷெராவத் 11-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
அடுத்த நடந்த அரையிறுதியில் அமன் ஷெராவத், ரஷ்யாவின் ஆர்யன் டிசியுட்ரின் மோதினர். இதில் 14-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். இதில் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற ஜப்பான் வீரர் ரெய் ஹிகுச்சியிடம் 1-11 என தோற்று, வெள்ளிப்பதக்கம் வென்றார்.