ADDED : ஜூலை 17, 2026 11:04 PM

புடாபெஸ்ட்: 'ரேங்கிங் சீரிஸ்' மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை ஹன்சிகா லம்பா வெள்ளி வென்றார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில், 'ரேங்கிங் சீரிஸ்' மல்யுத்த தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 55 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ஹன்சிகா லம்பா, உக்ரைனின் நடாலியா கிளிவ்சுட்ஸ்கா மோதினர். சமீபத்தில், சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் கைப்பற்றிய ஹன்சிகா 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான பிரீஸ்டைல் 65 கிலோ 3வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் விஷால் காளிராமன், கஜகஸ்தானின் ஒசும்ஷான் தஸ்டான்பெக் மோதினர். இதில் விஷால் 8-2 என வெற்றி பெற்று வெண்கலம் வென்றார். மற்றொரு போட்டியில் ('பிரீஸ்டைல்' 125 கிலோ)
இந்தியாவின் ரஜாத் ராகுல், அமெரிக்காவின் மாசன் மார்க் பாரிசை தோற்கடித்து வெண்கலத்தை தட்டிச் சென்றார்.
இத்தொடரில் இதுவரை இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என, 5 பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே அமன் ஷெராவத் (57 கிலோ) தங்கம், தீபக் (61 கிலோ) வெண்கலம் வென்றிருந்தனர்.
