தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பஜ்ரங் புனியாவுக்கு தடை * ஊக்கமருந்து சோதனைக்கு மறுத்ததால்...

பஜ்ரங் புனியாவுக்கு தடை * ஊக்கமருந்து சோதனைக்கு மறுத்ததால்...

பஜ்ரங் புனியாவுக்கு தடை * ஊக்கமருந்து சோதனைக்கு மறுத்ததால்...


ADDED : நவ 27, 2024 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 10:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஊக்கமருந்து சோதனைக்கு மறுத்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு, 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா 30. டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) வெண்கலம் வென்றவர். காமன்வெல்த் விளையாட்டில் 2 தங்கம் (2018, 2022), ஒரு வெள்ளி (2014) வென்றுள்ளார். பாலியல் புகார் கூறப்பட்ட, இந்திய மல்யுத்த சங்க (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக இருந்த பிரிஜ்பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வினேஷ் போகத், சாக் ஷி மாலிக் உள்ளிட்டோருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார் பஜ்ரங் புனியா.

கடந்த மார்ச் 10ல் ஹரியானாவில் தகுதிச்சுற்று நடந்தது. இதில் தோல்வியடைந்த பஜ்ரங் புனியாவிடம், ஊக்கமருந்து சோதனை நடத்த முயன்றனர். ஆனால், காலாவதியான உபகரணங்களை கொண்டு நடத்துவதால், சோதனைக்கு உடன்பட மறுத்தார். இதனால் தேசிய ஊக்கமருந்து சோதனை தடுப்பு மையம் (என்.ஏ.டி.ஏ.,), சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு (யு.டபிள்யு.டபிள்யு.,) பஜ்ரங் புனியாவுக்கு தற்காலிக தடை விதித்தது.

இதை எதிர்த்து அப்பீல் செய்ய, கடந்த மே 31ல் தற்காலிக தடை விலக்கப்பட்டது. அடுத்து என்.ஏ.டி.ஏ., சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுகுறித்து கடந்த செப். 20, அக். 4ல் விசாரணை நடந்தன. முடிவில், 'ஊக்கமருந்து சோதனைக்கு மறுத்தது தவறு தான். பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை (ஏப். 22, 2028 வரை) விதிக்கப்படுகிறது,' என என்.ஏ.டி.ஏ., தடை விதித்தது. இதனால் இவர் மீண்டும் போட்டியில் பங்கேற்க, அல்லது அன்னிய மண்ணில் பயிற்சியாளராக செயல்பட முடியாது.

பஜ்ரங் புனியா கூறியது:

எனக்கு தடை விதிக்கப்பட்டது அதிர்ச்சி தரவில்லை. ஏனெனில் கடந்த ஒரு ஆண்டாக வழக்கு நடந்தது. உண்மையில் எனது சிறுநீர் மாதிரியை சோதனைக்கு வழங்கினேன். ஆனால், 2020, 2021, 2022 தேதியிட்ட, காலாவதியான சோதனை உபகரணங்களை கொண்டு வந்திருந்தனர். அவற்றை வீடியோ எடுத்து, என்.ஏ.டி.ஏ.,விடம் தெரிவித்தேன். அவர்கள் தவறை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். மல்யுத்த போராட்டத்தில் பங்கேற்றதால் பழிவாங்க முயற்சிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us