sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

மல்யுத்தம்: பைனலில் ரீத்திகா * ஆசிய சாம்பியன்ஷிப்பில் அபாரம்

/

மல்யுத்தம்: பைனலில் ரீத்திகா * ஆசிய சாம்பியன்ஷிப்பில் அபாரம்

மல்யுத்தம்: பைனலில் ரீத்திகா * ஆசிய சாம்பியன்ஷிப்பில் அபாரம்

மல்யுத்தம்: பைனலில் ரீத்திகா * ஆசிய சாம்பியன்ஷிப்பில் அபாரம்


ADDED : மார் 27, 2025 10:52 PM

Google News

ADDED : மார் 27, 2025 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்மான்: ஆசிய 'சீனியர்' மல்யுத்த சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியாவின் ரீத்திகா முன்னேறினார்.

ஆசிய 'சீனியர்' மல்யுத்த சாம்பியன்ஷிப் ஜோர்டானில் நடக்கிறது. இந்தியா சார்பில் கிரிகோ ரோமன் (10), 'பிரீஸ்டைல்' பிரிவில் 20 (10 ஆண்+10 பெண்) என மொத்தம் 30 பேர் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நேற்று நடந்தன.

76 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரீத்திகா, 10-0 என ஜப்பானின் யமா மோட்டோவை வென்று, பைனலுக்கு முன்னேறினார்.

மான்சி நம்பிக்கை

68 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மான்சி லாதெர், சீனாவின் ஜெலு லியை சந்தித்தார். இதில் 1-10 என வீழ்ந்த மான்சி, அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்க உள்ளார்.

59 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் முஸ்கான், 2-12 என ஜப்பானின் சகுராவிடம் வீழ்ந்தார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இவர் மங்கோலியாவின் ஆல்ட்ஜினை சந்திக்க உள்ளார்.

55 கிலோ முதல் சுற்றில் தோற்ற இந்தியாவின் நிஷூ, ரெப்பிசாஜ் போட்டியில் வியட்நாமின் நிகுயனை 3-0 என வென்றார். அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்க உள்ளார்.

கிரிகோ ரோமன் (97 கிலோ) போட்டியில் இந்தியாவின் நிதேஷ் சிவாச், 9-0 என துர்க்மெனிஸ்தானின் அமன்பெர்டியை சாய்த்து, வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார்.






      Dinamalar
      Follow us