/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சாதிப்பரா இந்திய நட்சத்திரங்கள் * ஆசிய மல்யுத்தம் துவக்கம்
/
சாதிப்பரா இந்திய நட்சத்திரங்கள் * ஆசிய மல்யுத்தம் துவக்கம்
சாதிப்பரா இந்திய நட்சத்திரங்கள் * ஆசிய மல்யுத்தம் துவக்கம்
சாதிப்பரா இந்திய நட்சத்திரங்கள் * ஆசிய மல்யுத்தம் துவக்கம்
ADDED : மார் 24, 2025 10:42 PM

அம்மான்: ஆசிய மல்யுத்த 'சீனியர்' சாம்பியன்ஷிப் இன்று ஜோர்டானில் துவங்குகிறது. கிரிகோ ரோமன் பிரிவில் 10, 'பிரீஸ்டைல்' பிரிவில் 20 (10 ஆண்+10 பெண்) என இந்தியா சார்பில் மொத்தம் 30 பேர் களமிறங்குகின்றனர்.
இதில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப்பில் 2 முறை தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அன்டிம் பங்கல், சாதிக்க உள்ளார். கடந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்க கனவுடன் களமிறங்கிய இவர், 53 கிலோ பிரிவில் ஏமாற்றினார். இம்முறை 'சீனியர்' அரங்கில் ஆசிய அளவில் சாதிக்க முயற்சிக்கலாம்.
23வயது பிரிவின் உலக சாம்பியன் ரீத்திகா ஹூடா (76 கிலோ), 17 வயது பிரிவு உலக சாம்பியன் மான்சி லாதெர் (68 கிலோ), மணிஷா (62 கிலோ) உள்ளிட்டோர் மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஆண்கள் பிரிவில் தீபக் புனியா, 'சீனியர்' அரங்கில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 2019ல் ஜூனியர் உலக சாம்பியன் ஆன இவர், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதிபெறவில்லை. தற்போது பதக்கம் வெல்ல காத்திருக்கிறார். தவிர, சிராக் (57 கிலோ), விஷால் (70 கிலோ), உதித் (61 கிலோ) உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.