sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

மல்யுத்தம்: இந்திய பெண்கள் கலக்கல்

/

மல்யுத்தம்: இந்திய பெண்கள் கலக்கல்

மல்யுத்தம்: இந்திய பெண்கள் கலக்கல்

மல்யுத்தம்: இந்திய பெண்கள் கலக்கல்


ADDED : மே 30, 2025 11:03 PM

Google News

ADDED : மே 30, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உல்லன்பட்டர்: மங்கோலியாவில் மல்யுத்த ரேங்கிங் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டி நடந்தன. இந்தியாவின் அன்டிம் (53 கிலோ), பைனலில் ரஷ்யாவின் நடாலியாவை 10-0 என வீழ்த்தி தங்கம் கைப்பற்றினார்.

57 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் நேஹா, 4-0 என மங்கோலியாவின் போலுர்டுயாவை வென்று, தங்கம் வசப்படுத்தினார். மற்ற இந்திய வீராங்கனைகள் ஹர்ஷித்தா (72), முஸ்கான் (59) தங்களது பிரிவில் பங்கேற்ற 4 போட்டியிலும் வென்று, தங்கம் தட்டிச் சென்றனர்.

50 கிலோ போட்டியில் நீலம் வெண்கலம் வென்றார்.

அனில் அபாரம்

ஆண்களுக்கான 'கிரிகோ ரோமன்' போட்டிகள் 'ரவுண்டு ராபின்' முறையில் நடந்தன. 55 கிலோ பிரிவில் 4 போட்டியில் வென்ற இந்தியாவின் அனில் மோர், தங்கம் கைப்பற்றினார். 82 கிலோ பிரிவில் இந்தியாவின் பிரின்ஸ், 0-9 என கத்தாரின் ஷாஹினிடம் தோற்று, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

97 கிலோ பிரிவு முதல் இரு போட்டியில் வென்ற நிதேஷ், 4-5 என கிர்கிஸ்தானின் உஜுரிடம் வீழ்ந்து, வெள்ளி வென்றார்.

மற்ற இந்திய வீரர்கள் நிஷாந்த் (77), கரண் கம்போஜ் (87), நீரஜ் (67) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். நேற்று நடந்த 7 பிரிவுகளில் இந்தியாவுக்கு 6 பதக்கம் (1 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம்) கிடைத்தன.

இதுவரை இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கம் கைப்பற்றியுள்ளது.






      Dinamalar
      Follow us