தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/மணிஷா, நேஹா 'தங்கம்' * மல்யுத்த ரேங்கிங் தொடரில்...

மணிஷா, நேஹா 'தங்கம்' * மல்யுத்த ரேங்கிங் தொடரில்...

மணிஷா, நேஹா 'தங்கம்' * மல்யுத்த ரேங்கிங் தொடரில்...


ADDED : ஜூன் 05, 2026 10:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 10:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உல்லன்பாட்டர்: மல்யுத்த ரேங்கிங்' தொடரில் இந்தியாவின் மணிஷா, நேஹா தங்கம் வென்றனர்.

மங்கோலியாவின் உல்லன்பாட்டர் நகரில் சர்வதேச ரேங்கிங் மல்யுத்த தொடர் நடக்கிறது. நேற்று பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' பிரிவில் போட்டிகள் நடந்தன. 57 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் மணிஷா களமிறங்கினார். அரையிறுதியில் 6-1 என துருக்கியின் அல்விராவை வீழ்த்தினார். அடுத்து நடந்த பைனலில் மணிஷா, 3-1 என வடகொரியாவின் சிம் சனை சாய்த்து, தங்கம் கைப்பற்றினார்.

59 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நேஹா, 7-0 என துருக்கியின் பெஹிதாவை வென்றார். பைனலில் அசத்திய நேஹா, வட கொரியாவின் பியோல் ஹாங்கை சாய்த்து, தங்கம் கைப்பற்றினார்.

50 கிலோ பிரிவில் இந்தியாவின் நீலம், 'ரெப்பிசாஜ்' போட்டியில் 10-0 என கஜகஸ்தானின் மாரலை வீழ்த்தி, வெண்கலம் வசப்படுத்தினார்.

'கிரிகோ ரோமன்' போட்டியில் நிதேஷ், சுனில் தங்கம் வென்ற நிலையில், 60 கிலோ பிரிவில் இந்தியாவின் சாஹில் வெண்கலம் வென்றார். இதுவரை இந்தியா 4 தங்கம் 2 வெண்கலம் என 6 பதக்கம் வென்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us