பிரக்ஞானந்தா 'ஹாட்ரிக்' வெற்றி * குகேஷை வீழ்த்தி அபாரம்
பிரக்ஞானந்தா 'ஹாட்ரிக்' வெற்றி * குகேஷை வீழ்த்தி அபாரம்
ADDED : ஜூன் 05, 2026 10:57 PM

ஓஸ்லோ: நார்வே செஸ் தொடரில் உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில், சர்வதேச செஸ் ('கிளாசிக்கல்') 14வது சீசன் நடந்தது. ஆண்கள் பிரிவில் 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, 'நடப்பு சாம்பியன்' நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உள்ளிட்ட 6 பேர் பங்கேற்றனர்.
இதன் 9வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, குகேஷ் மோதினர். இத்தொடரின் 5வது சுற்றில் குகேஷ், பிரக்ஞானந்தாவை வென்றிருந்தார். இம்முறை கருப்பு காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 34 நகர்த்தலில் வெற்றி பெற்றார். இத்தொடரில் தொடர்ந்து மூன்று போட்டியில் அசத்திய இவர், 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தார்.
மற்றொரு போட்டியில் உலகின் 'நம்பர்-1' வீரர் கார்ல்சன், அமெரிக்காவின் வெஸ்லேயிடம் தோல்வியடைந்தார்.
ஒன்பது சுற்றுகளின் முடிவில் சோ வெஸ்லே (15.5 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா (15.0), பிரான்சின் அலிரேசா (14.5) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். குகேஷ் (8 புள்ளி) 6வது இடத்தில் (கடைசி) உள்ளார்.
திவ்யா ஏமாற்றம்
பெண்களுக்கான 9 வது சுற்றில் இந்தியாவின் திவ்யா, சீனாவின் ஜு ஜினெரிடம் தோல்வியடைந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பி, 'டை பிரேக்கரில்' சீனாவின் ஜு வென்ஜுனிடம் வீழ்ந்தார். ஒன்பது சுற்றுகளின் முடிவில் 16.5 புள்ளி பெற்ற கஜகஸ்தானின் பிபிசாரா, இன்னும் ஒரு சுற்று மீதமுள்ள நிலையில், சாம்பியன் ஆனார். ஜு ஜினெர் (13.0), உக்ரைனின் அனா முஜிசுக் (12.0) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். திவ்யா (10), ஹம்பி (9.0) கடைசி இரு இடத்தில் (5, 6) உள்ளனர்.
