/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
மல்யுத்தம்: விஸ்வஜித் 'வெண்கலம்'
/
மல்யுத்தம்: விஸ்வஜித் 'வெண்கலம்'
ADDED : அக் 23, 2025 10:46 PM

நோவி சாத்: உலக மல்யுத்தத்தில் இந்தியாவின் விஸ்வஜித் வெண்கலப் பதக்கம் வென்றார்.
செர்பியாவில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 'கிரிகோ ரோமன்' 55 கிலோ பிரிவில் போட்டி நடந்தது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் விஸ்வஜித், கஜகஸ்தானின் எராசிலை சந்தித்தார். இதில் 5-4 என வெற்றி பெற்ற விஸ்வஜித், வெண்கலம் வென்றாார். உலக மல்யுத்தத்தில் இவர், தொடர்ந்து வென்ற இரண்டாவது வெண்கலம் இது.
பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டி நடக்கின்றன. 55 கிலோ பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் நிஷூ, முன்னாள் உலக சாம்பியன் ஜப்பானின் மோ கியூகாவை, 6-2 என வீழ்த்தினார். காலிறுதியில் ரஷ்யாவின் கிராவை 10- 1 என வீழ்த்திய நிஷூ அரையிறுதிக்குள் நுழைந்தார்.