/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
மூன்றாவது சுற்றில் அல்காரஸ், ஸ்வியாடெக்: பிரெஞ்ச் ஓபனில் அசத்தல்
/
மூன்றாவது சுற்றில் அல்காரஸ், ஸ்வியாடெக்: பிரெஞ்ச் ஓபனில் அசத்தல்
மூன்றாவது சுற்றில் அல்காரஸ், ஸ்வியாடெக்: பிரெஞ்ச் ஓபனில் அசத்தல்
மூன்றாவது சுற்றில் அல்காரஸ், ஸ்வியாடெக்: பிரெஞ்ச் ஓபனில் அசத்தல்
ADDED : மே 28, 2025 10:31 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு ஸ்பெயினின் அல்காரஸ், உக்ரைனின் ஸ்விடோலினா, போலந்தின் ஸ்வியாடெக் உள்ளிட்டோர் முன்னேறினர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஹங்கேரியின் பேபியான் மரோசான் மோதினர். அபாரமாக ஆடிய அல்காரஸ் 6-1, 4-6, 6-1, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு 2வது சுற்றுப் போட்டியில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி 6-4, 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கொலம்பியாவின் டேனியல் எலாஹி கலனை வென்றார். மற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின், பிரான்சின் குவென்டின் ஹாலிஸ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, ஹங்கேரியின் அனா பான்டர் மோதினர். இதில் ஸ்விடோலினா 7-6, 7-5 என்ற நேர் செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா 6-0, 6-2 என சுவிட்சர்லாந்தின் விக்டோரிஜா கோலுபிக்கை வென்றார்.
மற்றொரு 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், பிரிட்டனின் எம்மா ரடுகானு மோதினர். அபாரமாக ஆடிய ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.