/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
போபண்ணா 'குட்-பை': டென்னிஸ் அரங்கில் இருந்து
/
போபண்ணா 'குட்-பை': டென்னிஸ் அரங்கில் இருந்து
ADDED : நவ 01, 2025 10:04 PM

புதுடில்லி: டென்னிஸ் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் போண்ணா.
இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா 45. பெங்களூருவை சேர்ந்த இவர், 2003ல் சர்வதேச போட்டியில் காலடி வைத்தார். 2017ல் பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் பூபதி, பயஸ், சானியாவுக்கு பின், கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 4வது இந்தியரானார் போபண்ணா.
ஆசிய விளையாட்டில் 2 தங்கம் (2018-இரட்டையர், 2022-கலப்பு இரட்டையர்) வென்றார். 2023ல் டேவிஸ் கோப்பையில் இருந்து விடை பெற்றார் போபண்ணா.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் இரட்டையரில் அசத்திய இவர், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் பட்டம் வென்ற மூத்த (43 வயது) வீரரானார். தவிர இவர், ஏ.டி.பி., இரட்டையர் பிரிவு தரவரிசையில் முதன்முறையாக 'நம்பர்-1' இடம் பிடித்த அதிக வயதான (43) வீரரானார்.
ஏ.டி.பி., ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஒரு கிராண்ட்ஸ்லாம், 6 மாஸ்டர்ஸ் உட்பட 26 பட்டம் வென்றுள்ளார் போபண்ணா.
கடைசியாக, பாரிஸ் மாஸ்டர்ஸ் முதல் சுற்றில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் இணைந்து களமிறங்கினார். இந்த ஜோடி முதல் சுற்றோடு வெளியேறியது.
இந்நிலையில் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போபண்ணா அறிவித்தார். இதன்மூலம் போபண்ணாவின், 22 ஆண்டு கால டென்னிஸ் வாழ்க்கை நிறைவு பெற்றது.
போபண்ணா வெளியிட்ட செய்தியில், 'அதிகாரப்பூர்வமாக எனது டென்னிஸ் ராக்கெட்டிற்கு ஓய்வு அளிக்கிறேன். மறக்க முடியாத 20 ஆண்டுகளுக்கு மேலான எனது டென்னிஸ் பயணத்தில் இருந்து ஓய்வு பெற சரியான நேரமாக கருதுகிறேன்,' என, தெரிவித்திருந்தார்.

