ADDED : நவ 01, 2025 10:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் பைனலுக்கு இந்தோனேஷியாவின் ஜானிஸ் முன்னேறினார்.
சென்னையில், பெண்களுக்கான 'டபிள்யு.டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தாய்லாந்தின் லான்லானா டாராருடீ, இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென் மோதினர்.
இரண்டு மணி நேரம், 24 நிமிடம் வரை நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய ஜானிஸ் 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
இரட்டையர் பிரிவு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டோர்ம் ஹன்டர், ருமேனியாவின் மோனிகா நிகுலெஸ்கு ஜோடி 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மை ஹோன்டமா, அகிகோ ஒமே ஜோடியை வீழ்த்தியது.

