/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
கோப்பை வென்றார் அல்காரஸ்: போராடி வீழ்ந்தார் சின்னர்
/
கோப்பை வென்றார் அல்காரஸ்: போராடி வீழ்ந்தார் சின்னர்
கோப்பை வென்றார் அல்காரஸ்: போராடி வீழ்ந்தார் சின்னர்
கோப்பை வென்றார் அல்காரஸ்: போராடி வீழ்ந்தார் சின்னர்
ADDED : ஜூன் 09, 2025 01:00 AM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் மீண்டும் சாம்பியன் ஆனார். ஐந்து மணி நேரத்திற்கு மேல் நீடித்த பைனலில் இத்தாலியின் சின்னரை வீழ்த்தினார்.
பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர், 'நம்பர்-2' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் மோதினர்.
முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய சின்னர், 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 7-6 என தன்வசப்படுத்தினார். பின் எழுச்சி கண்ட அல்காரஸ், 3வது செட்டை 6-4 என வென்றார். தொடர்ந்து அசத்திய அல்காரஸ், 'டை பிரேக்கர்' வரை நீடித்த 4வது செட்டை 7-6 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை தீர்மானிக்கும் 5வது செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதில் அசத்திய அல்காரஸ் 7-6 என வென்றார்.
ஐந்து மணி நேரம், 29 நிமிடம் நீடித்த போட்டியில் அல்காரஸ் 4-6, 6-7, 6-4, 7-6, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டார். பிரெஞ்ச் ஓபனில் தனது 2வது பட்டத்தை (2024, 2025) கைப்பற்றிய அல்காரஸ், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 5வது கோப்பை வென்றார். ஏற்கனவே யு.எஸ்., ஓபன் (2022), விம்பிள்டனில் (2023, 2024) சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
இத்தாலி ஜோடி கலக்கல்
பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இத்தாலியின் சாரா இரானி, ஜாஸ்மின் பவுலினி ஜோடி 6-4, 2-6, 6-1 என கஜகஸ்தானின் அனா டானிலினா, செர்பியாவின் அலெக்சாண்ட்ரா க்ருனிக் ஜோடியை வீழ்த்தி, பிரெஞ்ச் ஓபனில் முதன்முறையாக கோப்பை வென்றது. இது, சாரானி இரானியின் 2வது பிரெஞ்ச் ஓபன் பெண்கள் இரட்டையர் பட்டம். இதற்கு முன் 2012ல் சகவீராங்கனை ராபர்டா வின்சியுடன் இணைந்து சாம்பியன் பட்டம் கைப்பற்றி இருந்தார். தவிர இவர், இம்முறை கலப்பு இரட்டையரிலும் கோப்பை வென்றிருந்தார். பவுலினி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றார்.