/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
பைனலில் அனிசிமோவா-ஸ்வியாடெக்: விம்பிள்டன் டென்னிசில் மோதல்
/
பைனலில் அனிசிமோவா-ஸ்வியாடெக்: விம்பிள்டன் டென்னிசில் மோதல்
பைனலில் அனிசிமோவா-ஸ்வியாடெக்: விம்பிள்டன் டென்னிசில் மோதல்
பைனலில் அனிசிமோவா-ஸ்வியாடெக்: விம்பிள்டன் டென்னிசில் மோதல்
ADDED : ஜூலை 10, 2025 10:59 PM

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் பைனலில் அமெரிக்காவின் அனிசிமோவா, போலந்தின் ஸ்வியாடெக் மோதுகின்றனர்.
லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, 12வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா மோதினர். இரண்டு மணி நேரம், 37 நிமிடம் நீடித்த போட்டியில் அனிசிமோவா 6-4, 4-6, 6-4 என வெற்றி பெற்று, முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பைனலுக்கு முன்னேறினார். இதற்கு முன் பிரெஞ்ச் ஓபனில் (2019) அரையிறுதி வரை சென்றிருந்தார். சபலென்கா, 3வது முறையாக (2021, 2023, 2025) விம்பிள்டனில் அரையிறுதியோடு திரும்பினார்.
ஸ்வியாடெக் வெற்றி: மற்றொரு அரையிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-2, 6-0 என வெற்றி பெற்று விம்பிள்டனில் முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தார். இதற்கு முன் 2021ல் 4வது சுற்று வரை சென்றிருந்தார்.
இங்கிலாந்து ராணி வருகை
இங்கிலாந்து ராணி கமில்லா 77, விம்பிள்டன் காலிறுதி போட்டிகளை நேரில் காண வந்தார். போட்டிகளுக்கு இடையே செர்பிய வீரர் ஜோகோவிச்சை சந்தித்து பேசினார். ஜோகோவிச் கூறுகையில், ''இங்கிலாந்து ராணியுடன் கைகுலுக்க முடிந்ததை கவுரவமாக கருதுகிறேன். 2010ல் மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது,'' என்றார்.