ADDED : மார் 12, 2024 10:46 PM

இந்துார்: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு அன்கிதா ரெய்னா முன்னேறினார்.
இந்தியாவின் இந்துாரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, தைவானின் லீ ஏவை சந்தித்தார். முதல் செட்டை அன்கிதா 6-1 என எளிதாக வென்றார். இரண்டாவது செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது.
இதை அன்கிதா 7-6 எவ வசப்படுத்தினார். முடிவில் அன்கிதா 6-1, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரியா பாட்யா, தென் கொரியாவின் பார்க்கிடம் 3-6, 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, வைதேகி ஜோடி, 6-1, 6-1 என்ற கணக்கில் இந்தியாவின் திவ்யா, காஷிஸ் ஜோடியை வென்று, காலிறுதிக்குள் நுழைந்தது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஜீல் தேசாய், சஹாஜா ஜோடி வெற்றி பெற்றது.
