உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 17, 2024 10:39 PM

அ நிறம் | அளவு
மாட்ரிட்: ஸ்பெயினில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா ('நம்பர்-300', ரஷ்யாவின் அலினா சரயேவாவை ('நம்பர்-275') எதிர்கொண்டார்.
முதல் செட்டை அன்கிதா 6-4 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை 4-6 என நழுவவிட்டார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட் துவக்கத்தில் அன்கிதா 3-2 என முந்தினார்.
பின் மோசமாக செயல்பட்ட அன்கிதா 3-6 என செட்டை நழுவவிட்டார். இரண்டு மணி நேரம், 56 நிமிட போராட்டத்துக்குப் பின், அன்கிதா 6-4, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்விடைந்தார்.
