ADDED : ஜன 14, 2025 10:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பிரிட்டனின் நெய்தா பெய்ன்ஸ் ஜோடி, ஆஸ்திரேலியாடின் டினா நாடின், லாட்வியாவின் டயானா ஜோடியை சந்தித்தது. 53 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில், அன்கிதா ஜோடி 6-1, 6-1 என எளிதாக வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
மற்றொரு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி, ரியா பாட்யா ஜோடி, 6-1, 6-2 என்ற நேர் செட்டில் சக இந்தியாவின் லட்சுமி, ஷெபாலி ஜோடியை வீழ்த்தியது.
இந்தியாவின் பிரார்த்தனா தாம்ப்ரே, பிரிட்டனின் பார்னெட் ஜோடி, 6-1, 6-0 என ரஷ்யாவின் ரேன்கோல்டு, ஜொலாட்டரேவா ஜோடியை சாய்த்து காலிறுதிக்கு முன்னேறியது.