
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் ஸ்பெயினின் படோசா சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவில், வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் பவுலா படோசா, செக்குடியரசின் மேரி பவுஸ்கோவா மோதினர். முதல் செட்டை 6-1 எனக் கைப்பற்றிய படோசா, இரண்டாவது செட்டை 4-6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட இவர், 6-4 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார்.
முடிவில் படோசா 6-1, 4-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். தவிர இவர், 2 ஆண்டுகளுக்கு பின், டபிள்யு.டி.ஏ., பட்டம் வென்றார். கடைசியாக 2022ல் சிட்னியில் நடந்த சர்வதேச தொடரில் கோப்பை வென்றிருந்தார். இது, டபிள்யு.டி.ஏ., ஒற்றையரில் இவது 4வது பட்டம்.