உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 27, 2024 10:43 PM

அ நிறம் | அளவு
மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்குள் நுழைந்தது போபண்ணா ஜோடி.
அமெரிக்காவில் மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் உலகின் 'நம்பர்-2' இடத்திலுள்ள இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டன் ஜோடி, நெதர்லாந்தின் செம் வெர்பீக், ஆஸ்திரேலியாவின் ஜான் பாட்ரிக்-ஸ்மித் ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை போபண்ணா ஜோடி 3-6 என இழந்தது. 'டை பிரேக்கர்' வரை சென்ற இரண்டாவது செட்டை போபண்ணா ஜோடி 7-6 என கைப்பற்றியது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'சூப்பர் டை பிரேக்கரில்' போபண்ணா ஜோடி 10-7 என அசத்தியது.
ஒரு மணி நேரம் 43 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 3-6, 7-6, 10-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
