ADDED : அக் 23, 2025 10:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பசல்: சுவிட்சர்லாந்தின் ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் 45 வயது 'சீனியர்' வீரர் போபண்ணா, ஷெல்டன் (அமெரிக்கா) ஜோடி, மொனாக்கோவின் ஹியுகோ, பிரான்சின் ரோஜர் வாசலின் ஜோடியை சந்தித்தது. 2 மணி நேரம், 1 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 7-6, 6-7, 10-1 என வென்ற காலிறுதிக்கு முன்னேறியது.
* ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடக்கும் மற்றொரு ஏ.டி.பி., டென்னிஸ், ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சுவீடனின் ஆன்ட்ரே ஜோடி 3-6, 6-1, 10-8 என ஆஸ்திரியாவின் நெய்ல், ஜோயல் ஜோடியை சாய்த்து, காலிறுதிக்குள் நுழைந்தது.