ADDED : அக் 27, 2025 10:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில், பெண்களுக்கான 'டபிள்யு.டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நேற்று துவங்கியது.
இதன் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் மாயா ரேவதி, சஹாஜா, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா என மூவருக்கு சிறப்பு அனுமதி ('வைல்டு கார்டு') வழங்கப்பட்டுள்ளது. தகுதிச் சுற்றில் ஏமாற்றிய வைஷ்ணவி அத்கர், 'லக்கி லுாசர்' முறையில் பிரதான சுற்றுக்குள் நுழைந்தார்.
இந்நிலையில் ஒற்றையர் பிரிவு போட்டிகள் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டன.

