sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

டேவிஸ் கோப்பை: பாலாஜி, ராம்குமார் ஏமா்றறம்

/

டேவிஸ் கோப்பை: பாலாஜி, ராம்குமார் ஏமா்றறம்

டேவிஸ் கோப்பை: பாலாஜி, ராம்குமார் ஏமா்றறம்

டேவிஸ் கோப்பை: பாலாஜி, ராம்குமார் ஏமா்றறம்


ADDED : செப் 14, 2024 10:57 PM

Google News

ADDED : செப் 14, 2024 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்டாக்ஹோம்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ராம்குமார் ராமநாதன் தோல்வியடைந்தனர்.

சுவீடனில் நேற்று துவங்கிய டேவிஸ் கோப்பை டென்னிஸ், 'வேர்ல்டு குரூப்--1' போட்டியில் இந்தியா, சுவீடன் அணிகள் விளையாடுகின்றன. இதன் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, சுவீடனின் எலியாஸ் யெமர் மோதினர். முதல் செட்டை 4-6 என இழந்த ஸ்ரீராம் பாலாஜி, இரண்டாவது செட்டை 2-6 எனக் கோட்டைவிட்டார். முடிவில் ஸ்ரீராம் பாலாஜி 4-6, 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

ஒற்றையர் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சுவீடனின் லியோ போர்க் மோதினர். முதல் செட்டை 3-6 என இழந்த ராமநாதன், இரண்டாவது செட்டை 4-6 எனக் கோட்டைவிட்டார். முடிவில் ராம்குமார் ராமநாதன் 3-6, 4-6 என தோல்வியடைந்தார். இந்திய அணி 0-2 என பின்தங்கி உள்ளது.

இரட்டையர், மாற்று ஒற்றையர் போட்டிகள் (செப்டம்பர் 15) நடக்கின்றன. இரட்டையரில் ஸ்ரீராம் பாலாஜி, ராம்குமார் ராமநாதன் ஜோடி, சுவீடனின் பிலிப் பெர்கேவி, ஆன்ட்ரி கோரன்சன் ஜோடியை சந்திக்கிறது. மாற்று ஒற்றையரில் ராம்குமார்-எலியாஸ் யெமர், ஸ்ரீராம் பாலாஜி-லியோ போர்க் மோதுகின்றனர். இம்மூன்று போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.






      Dinamalar
      Follow us