ADDED : செப் 18, 2026 10:38 PM

சியோல் : டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் இந்தியாவின் தக் ஷினேஸ்வர், சுமித் நாகல் தோல்வியடைந்தனர்.
தென் கொரியாவின் சியோல் நகரில், டேவிஸ் கோப்பை டென்னிஸ் பைனலுக்கான தகுதிச்சுற்றின் 'ரவுண்டு-2' போட்டி நடந்தது. இதில் இந்தியா, தென் கொரியா அணிகள் விளையாடுகின்றன.
ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் தக் ஷினேஸ்வர் சுரேஷ், தென் கொரியாவின் சூன்வூ குவோன் மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய தக் ஷினேஸ்வர், 2வது செட்டை 3-6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் ஏமாற்றிய இந்திய வீரர் 4-6 என கோட்டைவிட்டார்.
இரண்டு மணி நேரம், 5 நிமிடம் நீடித்த போட்டியில் தக் ஷினேஸ்வர் 6-3, 3-6, 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
மற்றொரு ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், தென் கொரியாவின் ஹியான் சுங் மோதினர். முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய சுமித் நாகல், 2வது செட்டை 4-6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் போராடிய சுமித் நாகல் 5-7 என பறிகொடுத்தார்.
மூன்று மணி நேரம், 6 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய சுமித் நாகல் 6-4, 4-6, 5-7 என அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
இந்திய அணி 0-2 என பின்தங்கி உள்ளது. இரட்டையர், மாற்று ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடக்கின்றன. இதில் வென்றால் மட்டுமே இந்திய அணி 3-2 என, பைனல் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
