உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : பிப் 08, 2024 11:14 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு குரூப்-1' போட்டியில் இந்தியா, சுவீடன் அணிகள் மோதுகின்றன.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு குரூப்-1 பிளே-ஆப்' சுற்று நடந்தது. இதில் இந்திய அணி 4-0 என பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்நிலையில் 'வேர்ல்டு குரூப்-1' சுற்றுக்கான அட்டவணை வெளியானது. இதில் இந்திய அணி, சுவீடனை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இப்போட்டி வரும் செப்டம்பரில் நடக்கவுள்ளது.
டேவிஸ் கோப்பை வரலாற்றில் சுவீடனுக்கு எதிராக விளையாடிய 5 போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. கடைசியாக 2005ல் டில்லியில் நடந்த போட்டியில் இந்திய அணி 1-3 என சுவீடனிடம் வீழ்ந்தது.
சுவீடன் அணி சொந்த மண்ணில் நடந்த தகுதிச் சுற்றுல், 1-3 என பிரேசிலிடம் தோல்வியடைந்திருந்தது.
