தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/டேவிஸ் கோப்பை: இந்தியா வெற்றி

டேவிஸ் கோப்பை: இந்தியா வெற்றி

டேவிஸ் கோப்பை: இந்தியா வெற்றி


ADDED : பிப் 08, 2026 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 11:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதிச் சுற்றில் இந்திய அணி 3-2 என, நெதர்லாந்தை வீழ்த்தியது.

பெங்களூருவில், டேபிஸ் கோப்பை டென்னிஸ் தகுதிச் சுற்று ('ரவுண்டு-1') நடந்தது. இதில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவு முடிவில், போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.

இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, தக் ஷினேஸ்வர் ஜோடி, நெதர்லாந்தின் சாண்டர் அரென்ட்ஸ், டேவிட் பெல் ஜோடியை சந்தித்தது. இதில் ஜோடி 7-6, 4-6, 7-6 என வெற்றி பெற்றது.

மாற்று ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் 7-5, 1-6, 4-6 என நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜாங்கிடம் வீழ்ந்தார். இரண்டாவது போட்டியில் அசத்திய இந்தியாவின் தக் ஷினேஸ்வர் 6-4, 7-6 என நெதர்லாந்தின் குய் டென் குடெனை வீழ்த்தினார்.

முடிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது சுற்றில் இந்திய அணி, தென் கொரியாவை சந்திக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us