/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
டேவிஸ் கோப்பை: இத்தாலி 'சாம்பியன்'
/
டேவிஸ் கோப்பை: இத்தாலி 'சாம்பியன்'
ADDED : நவ 24, 2025 11:19 PM

போலோக்னா: டேவிஸ் கோப்பை டென்னிசில் இத்தாலி அணி சாம்பியன் ஆனது.
இத்தாலியில், டேவிஸ் கோப்பை டென்னிஸ் 113வது சீசனுக்கான 'நாக்-அவுட்' சுற்று நடந்தது. இதன் பைனலில் ஸ்பெயின், இத்தாலி அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெர்ரேட்டினி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயினின் பாப்லோ கரெனோ புஸ்டாவை வீழ்த்தினார்.
இரண்டாவது போட்டியில் இத்தாலியின் பிளாவியோ கோபோலி 1-6, 7-6, 7-5 என்ற கணக்கில் ஸ்பெயினின் ஜாம் முனாவை தோற்கடித்தார். முடிவில் இத்தாலி அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3வது முறை, ஒட்டுமொத்தமாக 4வது முறையாக (1976, 2023-25) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கடைசியாக, அமெரிக்க அணி தொடர்ச்சியாக 5 முறை (1968-72) சாம்பியன் ஆனது.

