/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
டேவிஸ் கோப்பை: சுமித் நாகல் தேர்வு
/
டேவிஸ் கோப்பை: சுமித் நாகல் தேர்வு
ADDED : ஆக 16, 2024 10:55 PM

புதுடில்லி:டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணிக்கு சுமித் நாகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுவீடனின் ஸ்டாக்ஹோமில் வரும் செப். 14-15ல் நடக்கவுள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு குரூப்-1' போட்டியில் இந்தியா, சுவீடன் அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ஒற்றையர் பிரிவில் விளையாட சுமித் நாகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யூகி பாம்ப்ரிக்கு இடம் கிடைக்கவில்லை. இதனையடுத்து ராம்குமார் ராமநாதன், ஒற்றையர், இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்பார். இவர்களை தவிர ஸ்ரீராம் பாலாஜி, நிக்கி பூனாச்சா, சித்தார்த் விஷ்வ்கர்மா தேர்வாகினர். மாற்று வீரராக ஆர்யன் ஷா இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் இந்திய டேவிஸ் கோப்பை அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜீஷன் அலி விலகினார். இவருக்கு பதிலாக புதிய பயிற்சியாளராக முன்னாள் தேசிய சாம்பியன் அஷுதோஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சொந்த காரணங்களுக்காக விலகிய ரோகித் ராஜ்பால், மீண்டும் கேப்டனாக அணிக்கு திரும்பினார்.