/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
இந்தியா-டோகோ மோதல் * டேவிஸ் கோப்பை டென்னிசில்...
/
இந்தியா-டோகோ மோதல் * டேவிஸ் கோப்பை டென்னிசில்...
ADDED : அக் 07, 2024 11:21 PM

லண்டன்: டேவிஸ் கோப்பை வேர்ல்டு குரூப் 1 'பிளே ஆப்' போட்டியில் இந்தியா, டோகோ அணிகள் மோதுகின்றன.
சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் ஆண்கள் அணிகளுக்கான முன்னணி தொடர் டேவிஸ் கோப்பை. உலகளவில் நடக்கும் அணிகளுக்கான மிகப்பெரிய தொடரான இதில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும்.
இந்திய அணி கடைசியாக 'வேர்ல்டு குரூப்---1' போட்டியில் 0-4 என வலிமையான சுவீடனிடம் தோற்றது. இதனால் வேர்ல்டு குரூப்-1 'பிளே-ஆப்' சுற்றுக்கு தள்ளப்பட்டது.
இதற்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது. வரும் 2025, ஜன. 31, பிப். 1 அல்லது பிப். 1, 2ல் வேர்ல்டு குரூப் 1, 2 'பிளே ஆப்' போட்டி நடக்கவுள்ளன. இதில் மொத்தம் 52 அணிகள் மோத காத்திருக்கின்றன.
இந்திய அணி இம்முறை, மேற்கு ஆப்ரிக்கவில் உள்ள டோகோ அணியை எதிர்த்து களமிறங்குகிறது. இதற்கான தேதி, போட்டி நடக்கும் இடம் பிறகு முடிவு செய்யப்பட உள்ளது.