/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
ஜோகோவிச், அல்காரஸ் முன்னேற்றம்: விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிக்கு
/
ஜோகோவிச், அல்காரஸ் முன்னேற்றம்: விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிக்கு
ஜோகோவிச், அல்காரஸ் முன்னேற்றம்: விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிக்கு
ஜோகோவிச், அல்காரஸ் முன்னேற்றம்: விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிக்கு
ADDED : ஜூலை 07, 2025 10:43 PM

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிக்கு செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயினின் அல்காரஸ் முன்னேறினர்.
லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ரஷ்யாவின் ஆன்ட்ரி ரப்லெவ் மோதினர். இதில் அல்காரஸ் 6-7, 6-3, 6-4, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு 4வது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் 1-6, 6-4, 6-4, 6-4 என, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு 4வது சுற்றில் குரோஷியாவின் மரின் சிலிக் 4-6, 4-6, 7-6, 6-7 என இத்தாலியின் பிளாவியோ கோபோலியிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், ரஷ்யாவின் எகடெரினா அலெக்சாண்ட்ரோவா மோதினர். அபாரமாக ஆடிய பென்சிக் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு 4வது சுற்றில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோனா 6-2, 5-7, 6-4 என செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை தோற்கடித்து காலிறதிக்கு தகுதி பெற்றார்.
பாம்ப்ரி ஜோடி தோல்வி
ஆண்கள் இரட்டையர் 3வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி 4-6, 6-3, 6-7 என ஸ்பெயினின் மார்சல் கிரானோலர்ஸ், அர்ஜென்டினாவின் ஹோராசியோ ஜெபல்லோஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
பெடரர் வருகை
விம்பிள்டன் போட்டியை நேரில் காண சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தனது மனைவி மிர்காவுடன் வந்திருந்தார்.