/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
பிரான்ஸ் வீரர் சாம்பியன்: சென்னை ஓபன் டென்னிசில்
/
பிரான்ஸ் வீரர் சாம்பியன்: சென்னை ஓபன் டென்னிசில்
ADDED : பிப் 09, 2025 10:45 PM

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் பிரான்சின் கிரியன் ஜாக்கட் சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னையில், ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் பிரான்சின் கிரியன் ஜாக்கட், சுவீடனின் எலியாஸ் மோதினர். 'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றிய ஜாக்கட், இரண்டாவது செட்டை 6-4 என வென்றார். ஒரு மணி நேரம், 37 நிமிடம் நீடித்த பைனலில் அசத்திய கிரியன் ஜாக்கட் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார். இது, இவரது 2வது ஏ.டி.பி., சேலஞ்சர் பட்டம். இதற்கு முன் 2023ல் இத்தாலியில் நடந்த தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றிருந்தார். கோப்பையுடன், ரூ. 20 லட்சம் பரிசு வென்றார் ஜாக்கட்.
ஆறு முறை ஏ.டி.பி., சேலஞ்சர் பட்டம் வென்றிருந்த சுவீடனின் எலியாஸ், 2018க்கு பின் வரிசையாக 5 பைனலில் (2019, 2021, 2022, 2024, 2025) தோல்வியடைந்தார். எலியாசுக்கு ரூ. 11 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

