sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

அரையிறுதியில் சபலென்கா-ஸ்வியாடெக் * பிரெஞ்ச் ஓபனில்...

/

அரையிறுதியில் சபலென்கா-ஸ்வியாடெக் * பிரெஞ்ச் ஓபனில்...

அரையிறுதியில் சபலென்கா-ஸ்வியாடெக் * பிரெஞ்ச் ஓபனில்...

அரையிறுதியில் சபலென்கா-ஸ்வியாடெக் * பிரெஞ்ச் ஓபனில்...


ADDED : ஜூன் 03, 2025 09:24 PM

Google News

ADDED : ஜூன் 03, 2025 09:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் உலகின் 'நம்பர்-1', பெலாரசின் சபலென்கா, 8வது இடத்திலுள்ள சீனாவின் குயின்வென் ஜெங்கை எதிர்கொண்டார். முதல் செட் இருவரும் சமபலத்தை வெளிப்படுத்த 6-6 என சமன் ஆனது. பின் நடந்த 'டை பிரேக்கரில்' சபலென்கா 7-6 என வசப்படுத்தினார். தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 6-3 என கைப்பற்றினார். முடிவில் சபலென்கா 7-6, 6-2 என நேர் செட்டில் வெற்றி பெற்றார். 2023க்குப் பின் மீண்டும் இத்தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில், இத்தொடரில் 'ஹாட்ரிக்' (2022, 2023, 2024) உட்பட 4 முறை கோப்பை வென்ற போலந்தின் ஸ்வியாடெக் ('நம்பர்-5'), உக்ரைனின் ஸ்விட்டோலினா ('நம்பர்-13') மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-1, 7-5 என நேர் செட்டில் வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தார். பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து 26வது வெற்றி பெற்ற ஸ்வியாடெக், அரையிறுதியில் சபலென்காவை சந்திக்க உள்ளார்.

காலிறுதியில் சின்னர்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீரர், இத்தாலியின் சின்னர், ரஷ்யாவின் ரூபலெவ் ('நம்பர்-17') மோதினர். இதில் சின்னர் 6-1, 6-3, 6-4 என நேர் செட்டில் வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.






      Dinamalar
      Follow us