
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லியான்: பிரான்சின் லியானில் ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, மெக்சிகோவின் சாண்டியாகோ கொன்சாலஸ், பிரான்சின் ரோஜர் வாசலின் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை யூகி பாம்ப்ரி ஜோடி 6-3 என கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 6-7 என இழந்தது. அடுத்து நடந்த 'சூப்பர் டை பிரேக்கரை' 10-7 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 44 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் யூகி பாம்ப்ரி, அல்பானோ ஜோடி 6-3, 6-7, 10-7 என போராடி வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.